இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாராவிற்கு எதிராக இயக்குநர் எஸ்.எஸ்.குமரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "எனது படத்தின் LIC எனும் தலைப்பை என் அனுமதியில்லாமல் விக்னேஷ் சிவன் வைத்தது மட்டும் நியாயமா? உங்களை விட பலம் பொருந்தியவர்கள் என்றால் 2 வருடம் பொறுமையோடு அனுமதி கேட்கும் நீங்கள், எளிய சிறிய படைப்பாளியான என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்கு நிச்சயம் கடவுள் மன்றத்தில் பதில் சொல்ல நேரிடும்" என்று தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.