கோவை, துடியலூரில் உள்ள தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் இல்லம், அலுவலகம் மற்றும் ஹோமியோபதி கல்லூரியில் 3வது நாளாக அமலக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மார்ட்டினின் உறவினர் இல்லங்களில் 2வது நாளாக சோதனை நடக்கிறது. மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் சிஆர்பிஎப் போலீஸ் பாதுகாப்புடன் சோதனை தொடர்கிறது. அதே போல், சென்னையில் உள்ள விசிக துணை பொதுச் செயலாளரும், மார்ட்டினின் மருமகனுமான ஆதவ் அர்ஜுனா வீட்டிலும் சோதனை நடந்தது.