கடந்தாண்டு செல்போன் ரீசார்ஜ் கட்டணங்களை அதிகரித்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள், மீண்டும் கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 10% வரை ரீசார்ஜ் கட்டணத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பாக, 5G சேவைகளுக்கு குறிப்பிட்ட விலைகள் அறிமுகப்படுத்தப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விலை உயர்வின் மூலம் JIO, VI, AIRTEL நிறுவனங்களின் சராசரி வருவாய் 25% வரை அதிகரிக்கலாம் என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.