திண்டுக்கல் ஆர்.எம். காலனி வெக்காளியம்மன் திருக்கோயிலில் நேற்று (ஜன., 14) பொங்கல் திருநாளை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் வெக்காளியம்மன் வராகி அம்மனுக்கு பொங்கல் சீர்வரிசை கொடுப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அம்மனை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து அருட்பிரசாதத்தை பெற்றுச் சென்றனர்.