கிராமிய கலைஞர்களுக்கான ஊதியம் ரூ.5,000 ஆக உயர்வு

62பார்த்தது
கிராமிய கலைஞர்களுக்கான ஊதியம் ரூ.5,000 ஆக உயர்வு
'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' என்ற மாபெரும் கலைவிழா கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் நிகழ்ச்சிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 13ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதில் தற்போது 1500 கிராமியக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் 75 கலைக் குழுக்களாக பிரிந்து 50 வெவ்வேறு கலை வடிவங்களை நிகழ்த்தி வருகின்றனர். அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு நாள் ஊதியம் ரூ.5000 ஆக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி