கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே இன்று ஜன.14 மாலை அரசு பஸ் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துக்க நிகழ்வுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தவர்கள் மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில் சரத்குமார், ஹரிஷ், நாகன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். இதையடுத்து, விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.