ஹோட்டலை சூறையாடிய 5 பேர் (வீடியோ)

64பார்த்தது
கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் ராமசாமி (24). இவர் திருச்சி ரோடு சிங்காநல்லூரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று (மே 16) ஓட்டலுக்கு 5 பேர் சாப்பிட வந்துள்ளனர். அப்போது ஒருவர் பாதையை மறைத்தவாறு உட்கார்ந்து உள்ளார். அவரை ஓரமாக உட்கார சொன்ன போது ராமசாமிக்கும் 5 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்த ஐந்து பேரும் ஓட்டலை அடித்து நொறுக்கினர். பின்னர் ராமசாமி மற்றும் அவரது தந்தையை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இந்நிலையில் இதுகுறித்த புகாரின் பேரில் 5 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

நன்றி: அப்டேட் 360

தொடர்புடைய செய்தி