‘பாஜக செய்த ஊழல்களை அம்பலப்படுத்துவோம்’ - கெஜ்ரிவால்

52பார்த்தது
‘பாஜக செய்த ஊழல்களை அம்பலப்படுத்துவோம்’ - கெஜ்ரிவால்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, திஹார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த கெஜ்ரிவால் இன்று தெற்கு டெல்லியில் நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது, "ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்துவோம்" என தெரிவித்துள்ளார். முன்னதாக கன்னாட் பிளேசில் உள்ள ஹனுமான் கோயிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம் செய்தார்.

தொடர்புடைய செய்தி