கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சந்தையில் கால்நடை சந்தையில் உள்ளூர் மட்டுமன்றி, வெளி மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர். மாடு, ஆடுகள், வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் தொடர் மழை காரணமாக போச்சம்பள்ளி வாரச்சந்தையில் இன்று ஆட்டுச்சந்தை முழுவதும் சேறும், சகதியுமாக காணப்பட்டதால் விவசாயிகளும், வியாபாரிகளும் ஆடுகளை வாங்கவும் விற்கவும் பெரும் அவதிக்குள்ளாகினர். உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சந்தையில் மண் கொட்டி சீர்செய்ய வேண்டும் என்று வியாபாரிகளின் எதிர் பார்ப்பாக உள்ளது.