ஊத்தங்கரை - Uthangarai

ஊத்தங்கரை: மின்சார சிக்கனம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஊத்தங்கரை: மின்சார சிக்கனம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஊத்தங்கரை மின்சார துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி.கிருஷ்ணகிரி மாவட்டம் மின்சார துறை சார்பில் ஊத்தங்கரை 2 பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட கெங்கம்பிராம்பட்டி அரசு ஆரம்ப பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் மின்சார விழிப்புணர்வு மற்றும் மின் விபத்துக்கள் எவ்வாறு ஏற்படுகின்றன என்பதையும் மின்விபத்துக்களை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்து மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. முன்னதாக அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புகள் வழங்கி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.இக்கூட்டம் உதவி பொறியாளர் கார்மேககண்ணன், முகவர் ஆனந்தன் ஆகியோரால் நடத்தப்பட்டது, அனைவரின் வீடுகளிலும் RCCB பொருத்த வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வீடியோஸ்


கிருஷ்ணகிரி