68 லட்சம் மதிப்பீட்டில் தாய்சேய் நல கட்டிடம்

75பார்த்தது
68 லட்சம் மதிப்பீட்டில் தாய்சேய் நல கட்டிடம்
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பேரூராட்சி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் டாடா நிறுவனத்தின் சமுதாய சுற்றுச்சூழல் பங்களிப்பு நிதியின் கீழ் ரூ. 68 லட்சம் மதிப்பீட்டில் தாய்சேய் நல கட்டிட கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு, இ. ஆ. ப, அவர்கள், தளி சட்டமன்ற உறுப்பினர் திரு. டி. ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் இன்று(04. 09. 2024) பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். உடன், மாவட்ட சுகாதார அலுவலர் மரு. ரமேஷ் குமார், வட்டார மருத்துவ அலுவலர் மரு. ராஜேஷ்குமார், டாடா குழுமத்தின் சமுதாய பங்களிப்பு நிதி தலைவர் திரு. ஆர். வி. சி. பதி, குழு நிர்வாகி திரு. ஆதிகேசவன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி