கிருஷ்ணகிரியில் உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு சுற்றுலாத்துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டது.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் நடந்தது.
இந்நிகழ்வில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச்சேந்த 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக சுற்றுலா அலுவலர் ஆனந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் ஜாபர் முன்னிலை வகித்தார். சுற்றுலா தினத்தினை முன்னிட்டு கிருஷ்ணகிரி வரலாற்று சுற்றுலா என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சியும் தொடங்கப்பட்டது.