கிருஷ்ணகிரி: பொதுமக்களை அச்சுறுத்தும் ரவுடிகள்...

4003பார்த்தது
கிருஷ்ணகிரி: பொதுமக்களை அச்சுறுத்தும் ரவுடிகள்...
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே எஸ். ஐ. , ஜெய்கணேஷ் தலைமையிலான போலீசார், கடந்த 28 ஆம் தேதி அன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ரகளையில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் நொகனுார் அருகே உள்ள என். கொத்தூர் பகுதியை சேர்ந்த மோகன்குமார்(39) மற்றும் அலேநத்தம் பகுதியைச் சேர்ந்த முனிராஜ்(33) என்பது தெரியவந்தது. இதை அடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது தேன்கனிக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் அடிதடி வழக்கு, தளி போலீஸ் ஸ்டேஷனில் கொலை வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி