கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் சார்பாக காட்டினாயனப் பள்ளி முருகர் கோயில் மலையில் மலையேற்ற பயிற்சி, சுகாதார, ஆரோக்கியம் கருத்தரங்கம் மற்றும் மாசு இலா தீபாவளி விழிப்பணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி மலைக் கோட்டை ஜேசீஸ் நிறுவனரும், கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் சங்க அமைப்பாளருமான சுரேஷ்பாபு, காட்டினாயனப் பள்ளி மலைமீது ஆஞ்சனேய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்குக்கு தலைமை வகித்தார். சென்னை தமிழ்நாடு மின்சார வாரிய நிறுவன செயற்பொறியாளர் (ஓய்வு) தண்டாயுதபாணி முன்னிலை வகித்து,
ஆரோக்கியத்தில் யோகாவின் பங்கு என்ற தலைப்பில் பேசினார். திமுக முன்னாள் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் இரவிச்சந்திரன் மலையேற்றத்தின் உடல் மன நலங்கள், அடுத்த தலைமுறைக்கான நம் ஆரோக்கியம், நடைப்பயிற்சி, உடற் பயிற்சி நன்மைகள் தலைப்பில் பேசினார்.
முன்னாள் கிருஷ்ணகிரி கலைக்கல்லூரி மாணவ செயலாளர் சிராஜ், தமிழக அரசின் தற்போதைய மாவட்ட மலையேற்ற இடங்கள் அதன் அனுகூலங்கள் பற்றியும், முன்னாள் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் மாதையன் ஆரோக்கியத்தில் சுகாதாரத்தின் பங்கு தலைப்பிலும், காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி மாசு இல்லா தீபாவளி பாதுகாப்போடு கொண்டாடுதல் பற்றியும் பேசினர்.