திருவாரூர் திருத்துறைப்பூண்டி அருகே தனியார் பேருந்து ஒன்று சாலையில் வேகமாக சென்றுகொண்டிருந்தது. அப்போது, அந்த பேருந்திற்கு முன்பாக சென்ற இருசக்கர வாகனம், திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், உருண்டு விழுந்த இருசக்கர வாகன ஓட்டுநர், பின்னாடி திரும்பியதும் பேருந்து வருவதைப் பார்த்து செய்வதறியாமல் திகைத்தார். அப்போது, அந்த பேருந்து ஓட்டுநர், சாமர்த்தியமாக வாகனத்தை திருப்பி, இளைஞரின் உயிரைக் காப்பாற்றினார்.