கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் நாரலப்பள்ளி தரப்பு ஒட்டப்பட்டி அருகே கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் இன்று (30-09-24) பெங்களூரில் இருந்து தக்காளி ஏற்றி வந்த ஈச்சர் லாரி பாலத்தின் பக்கவாட்டு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. மேற்படி சம்பவத்தால் உயிர் சேதம் ஏதும் இல்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.