பர்கூர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ பாலமுருகர் ஆலயத்தில் ஆடிக்கிருத்திகை விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் பக்தர்கள் மொட்டை அடித்து, காவடி எடுத்தும், அழகு குத்தியும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே அன்னதானமும் குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.