தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா.

71பார்த்தது
தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் எலத்தகிரி காத்தாம்பள்ளம் கொன்சாகா கலை மற்றும் அறி வியல் மகளிர் கல்லூரியில் தேசிய சாலை பாதுகாப்பு மாத வார விழா கல்லூரி கலையரங்கில் நடந்தது. கல்லூரி செயலாளர் நோயல் ராணி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அன்புசெழியன் கலந்து கொண்டு பேசம் போது டூவீலர் ஓட்டும் போது தலைக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். டூவீலரில் 2 பேருக்கு மேல் பயணம் செய்ய கூடாது. அதிவேகமாக வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பதின் மூலம் சாலை விபத்துக்களை குறைக்க முடியும் என கூறினார்.

டேக்ஸ் :