கிருஷ்ணகிரி: நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு

54பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் வழக்கறிஞர் ஒருவருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு ஏற்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

படுகாயம் அடைந்த வழக்கறிஞர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞர் கண்ணன் என்பவர் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். இந்த சூழலில் நீதிமன்றத்திற்கு வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வழக்கறிஞர் கண்ணனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த கண்ணனை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி