கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக கடும் வெயிலின் தாக்கத்தால் பாரூர் பெரிய ஏரி வரண்டு காணப்பட்டது. தற்போது போச்சம்பள்ளி அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த வரும் மழையால் பாரூர் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஏரி நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. மேலும் ஏரியில் தண்ணீர் நிரம்பி உள்ளதால் இந்த ஆண்டு முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.