கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள குந்துக்கோட்டை அடுத்த வீர்செட்டி ஏரி அருகே உள்ள விவசாயத் தோட்டத்தில் கஞ்சா செடிகள் பயிரிட்டு வளர்த்து வருவதாக வந்த தகவலின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் மாரியப்பன் என்பவரை கைது செய்தனர். மேலும் போலீசார் அவரிடம் இருந்து உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி மற்றும் 30 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்துள்ளனர்.