சூளகிரி: 53 கஞ்சா செடிகள் பறிமுதல்.. போலீசார் விசாரணை

60பார்த்தது
சூளகிரி: 53 கஞ்சா செடிகள் பறிமுதல்.. போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கஞ்சா செடி வளர்ப்பதாக கலால் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சூளகிரி பகுதியில் நேற்று (நவ.3) தேடும் பணியில் ஈடுப்பட்டனர். அப்போது ஏரி எப்பளம் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் இதே பகுதியை சேர்ந்த முனியப்பன் (55) கஞ்சா செடியை வளர்த்தது தெரிய வந்தது. போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டதில் 53 செடிகள் வளர்க்கப்பட்டு வந்தது தெரிய வந்தது. இதை அடுத்து கஞ்சா செடிகளை கலால் போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவான முனியப்பனை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி