போச்சம்பள்ளி: மாரியம்மன், செல்லியம்மன், கோவில் திருவிழா.

76பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்துள்ள பாப்பாரப்பட்டி, கொட்டாவூர், கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மாரியம்மன், செல்லியம்மன், திருவிழா நடைபெற்றது. 14 கிராமங்கள் மக்கள் ஒன்று சேர்ந்து திருவிழா நடத்தினர். இதில் பம்பை மேளதாளங்களுடன் ஊர்வலமான பெண்கள் மா விளக்கு எடுத்து வந்து, விநாயாகர், மாரியம்மன், மற்றும செல்லியம்மன், கோவிலில் வைத்து பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் பூசாரி கரகம் எடுத்து செல்லியம்மன் கோவிலில் எடுத்து வந்து தலை கூடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருவிழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றக்கணக்கன பொது மக்கள், பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி