ஸ்ரீ பெரியகாண்டி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா

82பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கள்ளப்பள்ளி காவல்காரன் தெருவில்
ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ பெரியகாண்டி அம்மன் கோவில் அமைந்துள்ளது

தற்போது இக்கோவிலானது புனரமைக்கப்பட்டு இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

முன்னதாக கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது

புனித நீர் கும்பத்தினை சிவாச்சாரியார்கள் யாகவேள்வி சாலையில் வைத்து வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரணம், அங்குரரப்பனம்,
கும்பஸ்தாபனம், யாகவேள்வி பூர்ணாகுதி பூஜைகள்
செய்யப்பட்டனர்.


இன்று காலை 2ம் கால யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும் புனித நீர் கும்பத்தினை சிவாச்சாரியார்கள் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.

தொடர்ந்து சுவாமிகளுக்கு Nசிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

இந்த கும்பாபிஷேக விழாவில்
கள்ளப்பள்ளி சுற்றியுள்ள ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

தொடர்புடைய செய்தி