கிருஷ்ணராயபுரத்தில் விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி

73பார்த்தது
கரூர் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள சங்கரன் மலைப் பட்டியில் இன்று காலை 10 மணியளவில் இயற்கை விவசாயம் குறித்து ஒரு நாள் பயிற்சி கிராம வேளாண் முன்னேற்ற குழுக்களுக்கான இயற்கை விவசாயம் குறித்தான பயிற்சி நடைபெற்றது.

இந்த பயிற்சியில் வேளாண் உதவி இயக்குனர் அரவிந்தன் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையம் புழுதேரி விஞ்ஞானி பேராசிரியர் திரவியம் ஆகியோர் கலந்து கொண்டு இயற்கை வேளாண்மையால், விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள், விளைச்சல், விலை பொருட்கள் விற்பனை ஆகியவை குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட கிராம வேளாண் முன்னேற்ற குழு உறுப்பினர்கள் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

தொடர்புடைய செய்தி