சின்ன சேங்கல் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். இருவர் படுகாயம்.
கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் செங்கல் பூவம்பாடி அருகே உள்ள காலனி தெருவை சேர்ந்தவர் சந்தான குமார் வயது 29.
இவர் நவம்பர் 11ஆம் தேதி இரவு 7 மணி அளவில், கரூரில் இருந்து செங்கல் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.
இவரது வாகனம் சின்ன சேங்கல், மாரியம்மன் கோவில் வளைவு அருகே வந்தபோது, எதிர் திசையில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, கருப்பூர், சின்னமலை பட்டி பகுதியைச் சேர்ந்த வீரபத்திரன் என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர், சந்தானகுமார் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இருவரும் டூவீலர் உடன் கீழே விழுந்ததில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதில் சந்தானகுமாரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள கங்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதேபோல வீரபத்திரனை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் அறிந்த சந்தானகுமாரின் தாயார் ரஞ்சிதம் வயது 51 என்பவர் அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய வீரபத்திரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மாயனூர் காவல்துறையினர்.