பத்தாம்பட்டியில் மாடு மாலை தாண்டும் விழா நடைபெற்றது.

79பார்த்தது
பத்தாம்பட்டியில் மாடு மாலை தாண்டும் விழா பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுக்கா,
அப்பிபாளையம் ஊராட்சியில் உள்ள கொக்கம்பட்டியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ வைரம்மாளுக்கு, மூக்கனாங்குறிச்சி கிராமத்தில் பத்தாம் பட்டிக்கு மேல் புறம் அமைந்து அருள் பாலித்து வரும்
ஸ்ரீ பாலகேத்து,
ஸ்ரீ பெத்தகேத்து ஆகிய மாலை கோவில் தெய்வங்களுக்கு மாடு மாலை தாண்டும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, வைரம்மாள் கோவிலில் இருந்து முப்பாட்டு கூடை மாலை கோவிலுக்கு அழைத்துச் செல்லும் நிகழ்வும், அதனை தொடர்ந்து எருதுகள் ஓட்டமும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் போது பாரம்பரிய இசை கருவிகளை இசைத்து அதற்கேற்றவாறு நடன அசைவுகளை அமைத்து விழாவை வெகு சிறப்பாக கிராம மக்கள் கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு மாடு மாலை தாண்டும் விழாவை சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி