கடன் பெற்று கொடுத்ததில் மோசடி-புகார்கொடுக்க குவிந்த பெண்கள்.

76பார்த்தது
கடன் பெற்று கொடுத்ததில் மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க எஸ். பி அலுவலகத்தில் குவிந்த பெண்கள்.


கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வேடிச்சிபாளையம், உத்தமி பொன்னுசாமி மண்டபம் அமைந்துள்ள சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஆத்தூர் பகுதியில் சுய உதவி குழுவில் உறுப்பினராக சேர்ந்து இருந்தனர்.

மொத்தம் 13 குழுக்களில் சேர்ந்திருந்த அந்த பெண்களிடம், முத்தூட், எல்என்டி, ஈக்விடாஸ், ஜோதி கிரிட், ஆசீர்வாதம் உள்ளிட்ட மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களில் கடன் பெற்று தருவதாக கூறி நபர் ஒன்றுக்கு சுமார் 10 லட்சம் வீதம் கடன் பெற்று குழுவில் இருந்த ஒவ்வொருவருக்கும் பாதி பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு, மீதி பணத்தை கடன் பெற்றுக் கொடுத்த பெண் எடுத்துக் கொண்டார்.

கடன் கொடுத்த நிறுவனங்கள் கடன் பெற்றவர்களிடம் முழு கடனையும் திருப்பி செலுத்த நாள்தோறும் டார்ச்சர் செய்தனர்.

இதனால், பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தனர்.

அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் உள்ளதால், புகாரை அளித்துவிட்டு செல்லுங்கள். தேர்தல் முடிந்த பிறகு இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்து உரிய தீர்வு காணலாம் என ஆலோசனை வழங்கினார்.

ஆயினும் பாதிக்கப்பட்டவர்கள் செய்வதறியாது எஸ்பி அலுவலக வாயிலேயே காத்திருந்ததால் சிறிது நேரம் பரபரப்பானது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி