கரூரில் பள்ளிகள் திறப்பு

83பார்த்தது
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் இன்று ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மே மாதம் கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும். மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4-ம் தேதி வெளியானதால்,


பள்ளிகள் ஜூன் 6-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்தது. எனினும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால், பள்ளிகள் திறப்பு ஜூன் 10-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

அதன்படி, கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. இந்த நிலையில் கரூர் மாவட்டம் முழுவதும் இன்று அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் திறக்கப்பட்டது.

முதல் நாளில் மாணவர்களை உற்சாகமாக வரவேற்க பல்வேறு பள்ளிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


முதல் நாளில் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி