ஆம்ஸ்ட்ராங் படுகொலை- சிபிஐ விசாரணை கேட்டு ஆர்ப்பாட்டம்.

74பார்த்தது
கரூரில் , ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் சிபிஐ விசாரணை கேட்டு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, தமிழகம் தழுவிய ஒடுக்கப்பட்ட பட்டியல் இன மக்களின் ஒற்றை குரலாக சிபிஐ நீதி விசாரணை கோரியும், பட்டியல் இன தலைவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டி கோரிக்கை ஆர்ப்பாட்டம் கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு, சமநீதி கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் ஆதிகிருஷ்ணன், சாமானிய மக்கள் நலக் காட்சி மாவட்ட செயலாளர் சண்முகம், அனைத்து தொழிலாளர் கூட்டமைப்பின் ராஜசேகர் , கரிகாலன், ஆதித்தமிழர் மக்கள் கட்சி சுந்தர்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், தலித் விடுதலை இயக்கம் மாநில தலைவர் கருப்பையா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில், புரட்சி பாரதம் மாநில துணை செயலாளர் வழக்கறிஞர் பெரியசாமி, மாவட்ட செயலாளர் செல்லமுத்து, ரெட்டமலை சீனிவாசன் பேரவை மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி