சட்டவிரோத சேவல் சண்டை. 4- பேர் கைது ரூபாய் 4150 பறிமுதல்.

63பார்த்தது
திப்பம்பட்டியில் சட்டவிரோதமாக சேவல் சண்டையில் ஈடுபட்ட நான்கு பேர் கைது ரூபாய் 4150 பறிமுதல்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோவிலூர் சாலையில் உள்ள திப்பம்பட்டியில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்துவதாக காவல் உதவி ஆய்வாளர் ராஜசேர்வைக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் நவம்பர் 2ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் திப்பம்பட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டார் ராஜசேர்வை

அப்போது அப்பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்துவது கண்டறியப்பட்டது.

இந்த சேவல் சண்டையில் ஈடுபட்ட திருப்பூர் மாவட்டம், தாராபுரம், மூலனூர் அருகே உள்ள அருள் ஜோதி நகரை சேர்ந்த கோவிந்தராஜ், குளித்தலை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த செல்லதுரை, அரவக்குறிச்சி சாந்தப்பாடி பகுதியைச் சேர்ந்த பெரியசாமி, மொடக்கூர் புதுப்பாளையத்தைச் சேர்ந்த அருண்குமார் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, இறந்த நிலையில் இருந்த ஒரு சேவலை பறிமுதல் செய்தனர்


மேலும், அவர்களிடமிருந்து ரூபாய் 4, 150- ஐ பறிமுதல் செய்த காவல்துறையினர், நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து பின்னர் காவல் நிலையப் பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி