மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

78பார்த்தது
க. பரமத்தி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் உயர் அழுத்த மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு தொகை வழங்க கோரியும், சாலையோரம் புதைவடம் கேபிள் அமைக்க கோரியும் உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கரூர் மாவட்டம் க. பரமத்தி பகுதியில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்றது இந்த பணியின் போது ஏராளமான விவசாய நிலங்கள் வழியாக அமைக்கும் பணி நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.


இந்த நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு குறைந்த அளவு இழப்பீடு வழங்கப்பட்டதாக கூறி இன்று க. பரமத்தி பேருந்து நிறுத்தம் அருகே உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் உயர் அழுத்த மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு தொகை, ஊக்கத்தொகை வழங்க வேண்டும், புதிய மின் திட்டங்களை கேபிள் மூலம் புதிய தடம் சாலை ஓரம் செயல்படுத்த கோரியும் 30க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அதனை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி