பள்ளப்பட்டிக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைப்பு

75பார்த்தது
பள்ளப்பட்டிக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைப்பு நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் லிட்டர் தண்ணீர் வீணாக செல்கிறது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.


கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் காவிரி ஆற்றில் இருந்து அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் குழாய் மூலம் வீடுகளுக்கு சென்று வருகிறது.

இந்த நிலையில் அரவக்குறிச்சியில் இருந்து பள்ளப்பட்டிக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள வேலம்படி ஊராட்சி மேளையாண்டிபட்டி பிரிவு பகுதியில் சாலை ஓரத்தில் பள்ளப்பட்டிக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு இரண்டு வருடமாக தண்ணீர் வீணாக கழிவுநீர் வடிகாலில் கலந்து வருவதாகவும், இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் இதுகுறித்து வேலம்பாடி ஊராட்சி மற்றும் அரசு அதிகாரியிடமும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கழிவுநீர் வடிகாலில் நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் லிட்டர் குடிநீர் வீணாகிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் அரசு குடிநீர் வீணாவதை விரைந்து தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி