அரவக்குறிச்சி டூவீலரில் சென்ற பெண்ணிடம் வழிப்பறி செய்ய முயன்ற இளைஞர் கையும் களவுமாக கைது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, சின்னமாநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி மனைவி
சங்கீதா வயது 45. இவர் அப்பகுதியில் டைலர் ஆக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அக்டோபர் 30-ஆம் தேதி இரவு 10: 15 மணி அளவில் எட்டியாகவுண்டனூரில் இருந்து அரவக்குறிச்சி செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.
இவரது வாகனம் அப்பகுதியில் உள்ள வண்டிக்காரன் தோட்டம் அருகே வந்தபோது,
அரவக்குறிச்சி தாலுக்கா, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜ் மகன் மணிகண்டன் வயது 26 என்பவர் சங்கீதாவின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை வழிப்பறி செய்ய முயன்று உள்ளார்.
அதேசமயம் உஷாரான
சங்கீதா சுதாரித்துக் கொண்டார். மேலும், கூச்சலிட்டு அப்பகுதி மக்களை உதவிக்கு அழைத்து மணிகண்டனை கையும் களவுமாக பிடித்தனர்.
மேலும், இது தொடர்பாக
சங்கீதா அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், மணிகண்டனை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, நவம்பர் 13 ஆம் தேதி வரை சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.