திம்மம்பட்டியில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய நான்கு பேர் கைது ரூபாய் 4150 பறிமுதல்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, திப்பம்பட்டி பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடப்பதாக காவல் உதவி ஆய்வாளர் ராஜசேவைக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் நவம்பர் 2-ம் தேதி மதியம் 2 மணி அளவில் கோவிலூர் சாலையில் உள்ள திப்பம்பட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது, அப்பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடப்பது கண்டறியப்பட்டது.
இந்த சட்ட விரோத செயலில் ஈடுபட்ட திருப்பூர் மாவட்டம், மூலனூர், அருள்ஜோதி நகரை சேர்ந்த கோவிந்தராஜ் வயது 46, கரூர் மாவட்டம், குளித்தலை, கோட்டைமேடு பகுதியை சேர்ந்த செல்லதுரை,
அரவக்குறிச்சி தாலுகா, சாந்தப்பாடி பகுதியைச் சேர்ந்த பெரியசாமி, அரவக்குறிச்சி தாலுக்கா, புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த அருண்குமார் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, அவர்கள் சேவல் சண்டை நடத்த பயன்படுத்திய சேவல் உயிரிழந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், அவர்கள் சேவல் சண்டை போட்டிக்காக பயன்படுத்திய ரூபாய் 4150 பறிமுதல் செய்தனர்.
நான்கு பேரையும் கைது செய்து , அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.