மார்த்தாண்டம்: சாலைக்கு  பாடை கட்டி பாஜக போராட்டம்

55பார்த்தது
நாகர்கோவில் -  திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை குண்டும் குண்டும் குழியுமாக குளம்போல காட்சியளிக்கிறது இந்த சாலையை செப்பனிட 19கோடி நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் அறிவித்தும் பணிகள் துவங்காத காரணத்தால் பல விபத்துக்கள் தொடர்கதையாகி வருவதை கண்டித்து குழித்துறை நகர பாஜக சார்பாக மார்தாண்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கட்பட் மற்றும் தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள்  மற்றும் மாநில அரசை  கண்டித்து குழித்துறை நகர பாஜகவினர்  பாடை கட்டி அஞ்சலி செலுத்தும் போராட்டத்தில் நேற்று (13-ம் தேதி) இரவில் ஈடுபட்டனர்.

    அப்போது அழுது ஒப்பாரி வைத்து பாடைக்கு பூக்கள் தூவி ஆம்புலன்சில் பாடையை அனுப்பி வைத்தனர். தேசிய நெடுஞ்சாலை செத்துவிட்டதாகவும், அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் செத்து விட்டதாகவும் கோஷங்கள் எழுப்பி ஒப்பாரி வைத்தனர். இந்த போராட்டத்தில் ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் ஏதோ அசம்பாவிதம் நடந்ததாக அச்சத்தோடு பார்த்தாலும் சாலை செப்பனிட நடத்திய நூதன போராட்டம் என்று அறிந்ததும் இதன் மூலமாவது சாலை செப்பனிட நடவடிக்கை யாராவது நடவடிக்கை எடுப்பார்களா?   என்ற ஏக்கத்துடன் சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி