கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு தினமும் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தொடர்கதையாகி விட்டது. கடத்தலில் ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்து வரும் நிலையில் நாளுக்கு நாள் அரிசி கடத்தல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்று ( 8-ம் தேதி) அருமனை போலீசார் பனங்கரை பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை தடுத்தி நிறுத்தியபோது ஓட்டுனர் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
பின்னர் போலீசார் அந்த காரை சோதனை செய்தபோது காரில் சாக்கு மூட்டைகளில் சுமார் 1000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிசி கேரளாவிற்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. காரை பறிமுதல் செய்த போலீசார் அரிசியுடன் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.