குலசேகரம் வாலிபரை திருமணம் செய்த திண்டுக்கல் காதலி மாயம்

6696பார்த்தது
குலசேகரம் வாலிபரை திருமணம் செய்த திண்டுக்கல் காதலி மாயம்
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இட்டகவேலி பகுதியை சார்ந்தவர் விஜின். இவர் ஒரு ஆண்டுக்கு முன் கோயம்புத்தூரில் தன்னோடு பணியாற்றியபோது அங்கு பணியாற்றிய திண்டுக்கல் வைதேகி சார்ந்த அபிநயா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அபிநயா நாகர்கோவிலில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் காலை வீட்டிலிருந்து வேலைக்கு சென்று அபிநயா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜின் பல்வேறு இடங்களில் தேடி உள்ளார். அபிநயா பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் சந்தேகம் அடைந்த விஜின் குலசேகரம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட குலசேகரன் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன அபிநயாவை தேடி வருகின்றனர். மாவட்ட எல்லைகளைக் கடந்து காதல் திருமணம் செய்த காதலி காணாமல் போன சம்பவம் குலசேகரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி