பூதப்பாண்டி அருகே கேரளாவுக்கு கடத்திய 6 டன் அரிசி பறிமுதல்

52பார்த்தது
பூதப்பாண்டி அருகே கேரளாவுக்கு கடத்திய 6 டன் அரிசி பறிமுதல்
பூதப்பாண்டி போலீஸ் இன் சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமணன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆண்டித்தோப்பு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஆரல்வாய்மொழியில் இருந்து ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது மூடை மூடையாக ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

      தொடர்ந்து நடத்திய சோதனையில் 6 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. உடனே அவற்றை பறிமுதல் செய்து விசாரித்தனர்.  பல்வேறு பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை சேகரித்து மூடையாக கட்டி குலசேகரம் வழியாக கேரளாவுக்கு கொண்டு செல்வது தெரிய வந்தது.  

    தொடர்ந்து டிரைவர் மணிகண்டன் ( 52) கிளீனர் பாதுஷா (56) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்த ரேஷன் அரிசியை நாகர்கோவில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி