மாநில அளவிலான சதுரங்க போட்டி வருகிற 27-ந் தேதி நடக்கிறது.

79பார்த்தது
மாநில அளவிலான சதுரங்க போட்டி வருகிற 27-ந் தேதி நடக்கிறது.
இவான்ஸ் சதுரங்க கழகம் நடத்தும் 17 வயதுக்கு உட்பட்ட
மாணவ, மாணவிகளுக்கான
மாநில அளவிலான ராப்பிட் சதுரங்க போட்டி நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சமீபம் உள்ள நாகர்கோவில் ஒய். எம். சி. ஏ. வளாகத்தில் 27-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9. 30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. போட்டி 7, 9, 11, 13, 17 வயது ஆகிய பிரிவுகளில் நடைபெறும். இதில் முதல் இரண்டு இடம் பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப்பரிசும், 3 மற்றும் 5-ம் இடம் வரை பிடிப்பவர்களுக்கு பரிசுக் கோப்பையும் வழங்கப்படும் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்களுக்கு முன்பதிவு கட்டாயம். முன்பதிவு செய்ய www. evanschessclub. com மற்றும் 8072683983, 9443130908 என்ற எண்ணில் வருகிற 25-தேதி இரவு 8 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். இத்தகவலை இவான்ஸ் சதுரங்க கழகம் செயலாளர் ஜீவன் குமார் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி