பிளாஸ்டிக் தோலுடன் பிறந்த இரட்டை குழந்தைகள்

61பார்த்தது
பிளாஸ்டிக் தோலுடன் பிறந்த இரட்டை குழந்தைகள்
ராஜஸ்தான்: நோக்கா நகரை சேர்ந்த பெண்ணுக்கு பிரசவத்தில் பிளாஸ்டிக் போன்ற கடினத்தன்மை கொண்ட தோலுடன் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ள அரிதினும் அரிதான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆண் குழந்தை 1.5 கிலோ எடையுடனும், பெண் குழந்தை 1.53 கிலோ எடையுடனும் பிறந்துள்ள இந்த இரட்டையர்களின் ஆயுட்காலம் சில வருடங்கள் மட்டுமே என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த அரிய வகை மரபணு நோய்க்கு ஹார்லெக்வின் இக்தியோசிஸ் என்று பெயர். இதுபோன்ற குழந்தைகள் இந்தியாவில் பிறப்பது இதுவே முதல் முறை.

தொடர்புடைய செய்தி