ஏழை, எளிய மக்களுக்கு எதிராக மத்திய அரசு பட்ஜெட் நிறைவேற்றியுள்ளதாக கூறியும், இந்த பட்ஜெட்டை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகட்சி சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதே போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் குமரி மாவட்டக்குழு சார்பில் நேற்று நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் செல்லசாமி தலைமை தாங்கினார். முன்னாள் எம். எல். ஏ. நூர்முகமது போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாநிலக்குழு உறுப்பினர் லீமாரோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கண்ணன், ரவி, ரெஜீஸ் குமார், அண்ணாதுரை, உஷா பாசி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்டக்குழு, வட்டாரக்குழு உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பப்பட்டன.