விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

78பார்த்தது
விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
குமரிமாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தீவிர பேரிடராக அறிவிக்க வேண்டும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் வாக்குசீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் கோபி பேரறிவாளன், மைய மாவட்ட செயலாளர் மேசியா, மேற்கு மாவட்ட செயலாளர் தேவகி, மண்டல துணை செயலாளர் திருமாவேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி