கனிமவளம் ஏற்றி வந்த லாரி பறிமுதல் அபராதம் விதிப்பு

51பார்த்தது
கனிமவளம் ஏற்றி வந்த லாரி பறிமுதல் அபராதம் விதிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க காலை 6 மணி முதல் 10 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை கனரக வாகனங்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பு மாநகருக்குள் நுழையும் கனரகவாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின்பேரில் நேற்று இரவு போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் வடசேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கனிம வளங்கள் ஏற்றிக்கொண்டு இரவு 10 மணிக்கு முன்பே ஒரு லாரி மாநகருக்குள் நுழைந்தது.

இதைத் தொடர்ந்து அந்த லாரியை தடுத்து நிறுத்திய போலீசார் லாரி டிரைவருக்கு அபராதம் விதித்தனர். அதோடு லாரி டிரைவர் ஓட்டுனர் உரிமம் இன்றி லாரியை இயக்கியதும் தெரியவந்தது. எனவே அவருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஓட்டுனர் உரிமம் இல்லாத நபருக்கு லாரியை ஓட்ட அனுமதி அளித்த லாரி உரிமையாளருக்கு ரூ. 5, 000 அபராதம் விதிக்கப்பட்டதோடு லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி