கன்னியாகுமரி மாவட்டத்தில் அணை பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதையடுத்து நாகர்கோவில் சுற்று வட்டாரப் பகுதிகளான கோட்டார், ஆசாரிபள்ளம், பார்வதிபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பிற்பகல் கனமழை பெய்தது. குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் கொட்டி தீர்த்த கனமழை நின்றது என்பது குறிப்பிடத்தக்கது.