நாகர்கோவிலில் திருட்டுத்தனமாக மது விற்றவர் கைது.

85பார்த்தது
தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை)நாடளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி 3 நாட்கள் டாஸ்மாக் மதுக்கடை கள் மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது. அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன. தொடர்ந்து தேர்தல் முடிவடையும் நாள் வரை மதுக்கடைகள் மூடப்பட்டு இருக்கும். இது தொடர்பான அறிவிப்பு பலகை மதுக்கடை முன் வைக்கப்பட்டுள்ளது. மதுக்கடை மூடப்பட்டதால் திருட்டுத்தனமாக மது விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் கோட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் தலைமையிலான போலீசார் ரெயிலடி திடல் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த அருள் (வயது 34) என்பதும், அவர் மது விற்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி