கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் திருவள்ளுவர் சாலையை சேர்ந்தவர் ராஜேஸ் (47). இவர் குளச்சல் மின் வாரிய அலுவலகத்தில்
போர் மேனாக
வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று மாலை இலப்பவிளையில் உள்ள டாரான்ஸ்பார்மரில் ஆய்வு பணி மேற்கொண்டார். பின்னர் அலுவலகம் செல்வதற்கு பைக்கில் ரிபாய் பள்ளிச்சாலையில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பைக் ராஜேஸ் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயமடைந்த ராஜேஸ் மீட்கப்பட்டு உடையார்விளையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குளச்சல் போலீசார் மின் ஊழியர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற பைக் பதிவு எண் மீது வழக்குப்பதிவு செய்து நபரை தேடி வருகின்றனர்.