குமரி கடற்கரையில் கடலுக்கு செல்ல தயாராகும் விசைப்படகுகள்

79பார்த்தது
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிப்பதற்கு 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டிருந்தது.   ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி முடியும் வரை இந்த தடைக்காலம் அமலில் இருப்பது வழக்கம்.  

    இந்த நிலையில்  குமரி மேற்கு பகுதிகளான குளச்சல் மீன்பிடி துறைமுகம், தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகம் போன்ற பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் கடலில் மீன் பிடிக்க சொல்லாமல் கரையில் ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

       இந்த நிலையில் மீன்பிடி தடைக்காலம் நாளை புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவடைகிறது. இதையடுத்து விசைப்படகு மீனவர்கள் நாளை மறுநாள் வியாழக்கிழமை முதல் மீண்டும் ஆழ்கடலில் மீன் பிடிப்பது செல்ல தயாராகி வருகின்றனர். இதை அடுத்து தற்போது விசைப்படகுகளில் ஐஸ் நிரப்பும் பணி தொடங்கியுள்ளது.  படகுகளில் தொழிலாளர்கள் இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி