கோழிளை டாஸ்மாக் கடையை மூட வேண்டும் கலெக்டரிடம் எம் எல் ஏ மனு

1068பார்த்தது
கோழிளை டாஸ்மாக் கடையை மூட வேண்டும் கலெக்டரிடம் எம் எல் ஏ மனு
கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட களியக்காவிளை, கோழி விளை  பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பகுதி அதிகம் பொதுமக்கள் வசிக்கின்ற குடியிருப்பு பகுதியாகும். பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை மற்றும் வழிபாட்டுத்தலங்கள் செயல்பட்டு உள்ளன. இதனால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் இந்த டாஸ்மாக் கடை உள்ளது.

     எனவே இந்த டாஸ்மாக் கடை அகற்ற வேண்டும் என்று கேட்டு ஏற்கனவே அமைச்சர் உள்ளிட்ட துறையினரை சந்தித்து மனு அளிக்கப்பட்டிருந்தது.

        இந்த நிலையில்  கடந்த 31ஆம் தேதி இதே டாஸ்மாக் கடையில்  ஏற்பட்ட பிரச்சனையில் டாக்டர் ஒருவர்  குத்தி கொலை செய்யப்பட்டார். எனவே இந்த  டாஸ்மாக் கடை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் நேற்று கலெக்டரை சந்தித்து மனு அளித்தார். அவருடன் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி