புதுக்கடை அருகே வெவ்வேறு இடங்களில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது கார், பைக் மோதியதில் 2 பேர் காயமடைந்தனர்.
கிள்ளியூர் பெரிய விளை பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 56). இவர் நேற்று (செப்.11) சடையன்குழி சாலையில் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே ரோட்டில் பின்னால் வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் ஒன்று மணியை மோதி தள்ளி விட்டு, நிற்காமல் சென்று விட்டது.
இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, காஞ்சிரகோடு பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிட்சைக்கு அனுமதித்தனர். இது தொடர்பாக மணியின் மனைவி செல்வி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இது போன்று இனயம்புத்தன்துறை, 5 - ம் அன்பியத்தை சேர்ந்த பனிமேரி (வயது 60) என்பவர் நேற்று(செப்.11) தேங்கா பட்டணம் - கருங்கல் சாலையில் செந்தறை பகுதியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கீழ்குளம் பகுதி ஜாண்றோஸ் மகன் ஜெரின் (வயது 24) என்பவர் ஓட்டிய பைக் பனிமேரியின் பின்னால் மோதி தள்ளியது.
இதில் படுகாயமடைந்த பனிமேரி காஞ்சிரகோடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக அவரது மகன் பிரதீப் என்பவர் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.